உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பொலிஸ் பரிசோதகர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பரிசோதகர் அபுபக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை, அக்கறைப்பற்றிலுள்ள அவரது வீட்டில் வைத்தே, கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலத்தில், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் அபுபக்கர் கடமையாற்றியுள்ளார்.

தற்போது அம்பாறை பொலிஸ்  வாகன போக்குவரத்து பிரிவில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வருகிறார்.

இந்நிலையிலேயே குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை இன்று கைது செய்துள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.