மக்கள் சுகாதார நடைமுறைகளை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர்- அனில் ஜாசிங்க

பெரும்பாலான மக்கள் கொரோனா வைரஸினை சாதாரண விடயமாக கருத ஆரம்பித்து விட்டனர். இதனால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கூட பின்பற்றாமல் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அனில் ஜாசிங்க மேலும் கூறியுள்ளதாவது, கந்தக்காடு புனர்வாழ் நிலையத்தில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இதேவேளை நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கம் தளர்த்தப்பட்டதனை தொடர்ந்து பெரும்பாலான மக்கள், கொரோனா வைரஸ் தொற்றினை சாதாரணமாக கருத ஆரம்பித்துவிட்டனர்.

இதன் காரணமாக சில நிறுவனங்கள் மற்றும்  பெரும்பாலான மக்கள், அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை முற்றாக தவிர்த்து வருகின்றனர்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.