மட்டக்களப்பு பிரதேசத்தை தளமாக கொண்டு இயங்கும் ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு – ஊடகவியலாளர் சந்திப்பு இன்று

மட்டக்களப்பு பிரதேசத்தை தளமாக கொண்டு இயங்கும் ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இடம் பெற்றது.

இதில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது-
தமிழையும், தமிழ் தேசியத்தையும் அம்பாறை மாவட்டத்தில் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக ஜனநாயக போராளிகள் கட்சியினர் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியுள்ளார்கள்.

அதன் நோக்கம் தமிழ் இருப்பை பாதுகாப்பதற்கும் தமிழர்களின் அடையாளத்தை பாதுகாப்பதற்காகவும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள்,பொருளாதாரம்,கலை கலாச்சாரத்தை பாதுகாக்க களமிறக்கப்பட்டள்ளார்கள்.

இந்த மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை உறுதிபடுத்த களமிறங்கியுள்ளார்கள்.

வட கிழக்கிலே அதிக ஆசனங்களை பெற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேரம் போசும் சக்தியாக இருக்க வேண்டும் அத்துடன் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாகவும் இருக்க வேண்டும் பேரம் பேசும் சக்தியின் மூலம் தமிழர்களின் உரிமைகள் வட கிழக்கில் வென்றெடுத்தப்பட வேண்டும்.

கூடுதலான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்க கிடைக்க வேண்டம் என்ற அடிப்டையில் ஜனநாயக போராளிகள் கட்சி எங்களுடன் இணைந்துள்ளது.
அவர்களை பாராட்டுகிறேன் என்றா அம்பாறை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று வெற்றியை உறுதிபடுத்த பாடுபடவுள்ளனர்.

இதன்போது- ஜனநாயக கட்சி கொள்கை பரப்பு செயலாளர்- ப.கோணேஸ் கருத்த தெரிவித்தார்….வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 18 தொடக்கம் 20 பேர் வரை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கு சிங்கள தேசம் சில நாசகார சக்திகளை தேர்தலில் களமிறக்கியுள்ளது இத்தரணத்தில் தமிழ் மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும்.
கட்சியின் வெல்லாவெளி பிரதேச குழு தலைவர்-கேணல் சுதாவும் கருத்து தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் வெகவாக பாதிக்கப்பட்டள்ளனர்.
அம்பாறை மாவட்ட மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்க வாக்களிக்க வேண்டும்.
கட்சின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அணி சார்பாக அழகையா திருலட்சுமி கருத்த தெரிவிக்கும் போது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவத்தார்

இதன் போது கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸ்வரன் அத்துடன கட்சின் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.