கிழக்கிலங்கை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற உற்சவ காலத்தினை கருத்திற்கொண்டு பாதுகாப்பு தரப்பினரால் விடுக்கப்படுகின்ற வேண்டுகோள்…

கிழக்கிலங்கை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற உற்சவ காலத்தினை கருத்திற்கொண்டு பாதுகாப்பு தரப்பினரால் விடுக்கப்படுகின்ற வேண்டுகோள் உற்சவ காலங்களில் ஆலயத்தினை தரிசிப்பதற்கு வரும் அடியார்கள் ஆலயத்தில் இடம் பெறுகின்ற பூசைநிகழ்வுகளை கண்டுகளித்து அதன்பிற்பாடு அங்கு தங்குவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் பூசைநிகழ்வுகளில் கலந்து கொள்ளுகின்ற அடியார்கள் தங்களது பிரதேசங்களில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி நிலையத்தில் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை சான்றிதழினை கொண்டு வருபவர்கள் ஒரு வேளை பூசை நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அன்றயனால் பூசை உபய காரர்கள் 50 அடியார்கள் மாத்திரம் ஆலயத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
உள்ளே செல்பவர்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.இவ் அனைத்து செயற்பாட்டிற்கும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அடியார்களுக்கு அறிவுறுத்தல்களை பாதுகாப்பு தரப்பினர் விடுத்துள்ளனர்.

14/07/2020 இன்று தொடக்கம் அனைத்து சேயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.