கொரோனா வைரஸ் நெருக்கடி பற்றிய தரவுகளை அரசாங்கம் மறைக்கிறது – கிரியெல்ல

கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளை அரசாங்கம் மறைத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டிமாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தேர்தலில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பான உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

ஜூலை 13, 14 முதல் 15 ஆம் திகதி முன்னெடுக்கவிருந்த பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளபோதும் இந்த முடிவின் பின்னணியில் உள்ள உண்மையை அவர்கள் சுட்டிக்காட்டவில்லை என்றும் குறிப்பிட்டார்.

எனவே பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறுத்தியமைக்கான உண்மையான காரணத்தினை இந்த அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் கூறியிருந்தாலும், அரசாங்கத்தினால் அறிவிக்கப்படும் தற்போதைய தரவு தொடர்பான உண்மைத்தன்மை தொடர்பாக கேள்வியெழுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.