மன்னாரில் சட்ட விரோதமான அரச காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராச மடுக் கிராமத்தில் தனியார் ஒருவரால் அரச காணி , கோவில் காணி , இந்தியாவில் உள்ள பொது மக்களின் காணிகள் என சுமார் 49 ஏக்கர் காணிகளை துப்பரவு செய்து வேலியிடும் நடவடிக்கையில் நேற்று முன் தினத்திலிருந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நானாட்டான் சிறி செல்வ முத்து மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரும் , பொது மக்களும் இணைந்து மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்தனர்.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் உதவித்தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் அவர்களின் பணிப்பில் மன்னார் தேர்தல் முறைப்பாட்டுக்குழு அதிகாரி ஏ.டி.பி.றொகான் தலைமையிலான குழுவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பொலிசாருடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடினர்.
இதன் போது தேர்தல் காலத்தில் முரண்பாடுகளை தவிர்துக் கொள்வதற்காக அரச, கோவில் காணிகளை வேலியிடும் செயற்பாடுகளுக்கு தடைவிதித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.