இலங்கை கடற்படையின் புதிய தளபதி நியமனம்
இலங்கை கடற்படையின் 24ஆவது கடற்படைத் தளபதியாக வயிஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (புதன்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை தலைமை நிர்வாகியாக செயற்பட்டுள்ளார்.
நாட்டின் 23ஆவது கடற்படைத் தளபதியாக செயற்பட்ட பியல் டி சில்வா ஒய்வு பெற்றதனைத் தொடர்ந்து, இவர் 24ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை