இலங்கையில் கொரோனாவின் தாக்கம் குறித்து மறைப்பதற்கு ஒன்றும் இல்லை – இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதி செயலகம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக கடந்த மாதங்களைப் போலவே கொரோனா தொற்றுக் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டு வருவதால், எம்மிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இதனை நாம் தொடர்ந்து செய்வோம்.

இரத்தினபுரி போன்ற பகுதிகளில் இருந்து கொரோனா தோற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சில கதைகள் வெளிவருகின்றன. ஆனால் அவை உண்மையல்ல.

உண்மையில் அவர்கள் அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த தமது உறவினர்கள் நண்பர்களை பார்வையிட சென்றவர்கள்தான். ஏனையவர்கள் குற்றம் சாட்டுவதைப்போல அவர்கள் அனைவரும் கொரோனா தோற்றாளர்கள் இல்லை.

இவ்வாறு குறித்த பகுதிகளில் கந்தகாடு புணர்வாழ்வு மையத்துடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதார அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டு, அவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.