மக்களுக்கு எதுவும் செய்யாத உதயகுமார் அரசியலுக்கு வந்து என்ன சாதிக்கப்போகின்றார்? – அம்பிட்டிய தேரர் கேள்வி!

மட்டக்களப்பு முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த மா.உதயகுமார் அரசாங்க அதிபராக  இருந்த காலத்தில்   மக்களுக்கு  எதையும் செய்யாத நிலையில் அரசியலில் வந்து எதை சாதிக்கப்போகின்றார் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாரதிபதியும் சுயேச்சைக்குழு 22 வேட்பாளருமான அம்பிட்டிய சுமணரத்தன தேரர் தெரிவித்தார்

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”பொது தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறேன். அவ்வாறு செல்லும் போது நான் காண்கிற விடயங்கள் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. 30  வருட யுத்தத்திற்கு முகம்கொடுத்த மக்கள்தான் அங்கு வசிக்கிறார்கள். இதுவரை ஆண்ட அரசியல்வாதிகள் இதனை சற்றேனும் காணவில்லையா? என மனக்கவலையாக இருக்கிறது.

இதனை நான் தொடர்ச்சியாக கதைத்த வண்ணமேயுள்ளேன். அதே போன்று பலர் இந்த மங்களராம விகாரைக்கு வந்து என்னிடம் தமது துன்பங்களை கூறுகிறார்கள். இவை அனைத்தும் இவ்வாறே இருக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபராக இருந்து தற்போது  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் மா.உதயகுமார் தேர்தலில் களமிறங்கும் வரை தன்னுடைய பதவியில் 4 வருடம் அமர்ந்து கொண்டு அரசினால் கிடைக்கப்பெறும் மானியங்களையும் வரபிரசாதங்களையும்,புத்தி ஜீவிகளான உத்தியோக த்தர்களையும்  வைத்து கொண்டு மட்டக்களப்பு மக்களுக்கு அவரால் செய்யப்பட்ட ஒரு வேலையை காட்டும்படி கேட்கின்றேன்.

உண்மையிலேயே அவர் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு கிராமமாக செல்வாறாக இருந்தால் மக்களுடன் கதைப் வராக இருந்தால் அவரக்குத்தெரியும் அவர் அரசாங்க அதிபராக  இருந்த காலத்தில் என்ன மட்டக்களப்பு மக்களுக்கு செய்துள்ளார்?

குடிநீர் பிரச்சனை . மற்றும் வாழ்வாதற்கு வீடு இல்லா பிரச்சனை எனவே இவற்றுக்கு பதில் கூறவேண்டிய  ஒரு வேடபாளராக  இருப்பாராக இருந்தால் அவரை எனக்கு காட்டுங்கள் நான் என்னுடைய வாக்கையும் அவருக்கு வழங்குகின்றேன். ” என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.