இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கையின் படி, பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் மொத்தமாக இதுவரை 130,390 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் நேற்று (புதன்கிழமை) மாத்திரம் 2,470 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இதுவரையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2,674 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.