முதலைக்கு இரையான மூன்று வயது குழந்தை!

அநுராதபுரம் – மீகலேவா பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீகலேவா பகுதியில் உள்ள ஏரியொன்றில் குழந்தையும் அவரது தாயும் நேற்று மாலை நீராட சென்றபோதே, குறித்த பெண் குழந்தை முதலையிடம் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் முதலையிடமிருந்து குழந்தையை காயங்களுடன் மீட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக தம்புத்தேகமா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.