அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பொலிஸ் நிலையத்தை நோக்கி கற்களை வீசியெறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த பகுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மொறட்டுவை – லுனாவ பகுதியில் அண்மையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், இவ்வாறு பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.