பிணைமுறி மோசடி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு!

2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் நிதி மோசடி தடுப்புசட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு  திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புபட்டுள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின்  உரிமையாளர்  அர்ஜீன் அலோசியஸ்  உட்பட  சந்தேக நபர்கள் நீதிமன்றில்  முன்னிலையாகியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

நிதிமோசடி தடுப்புசட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த வழக்கு  எதிர்வரும் நவம்பர் மாதம்  12 ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு  குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு  நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.