நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்துவது தொடர்பான கூட்டம் யாழில்!

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்   யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார பிரிவினரால் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தின் போது பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது வாக்களிப்பு நிலையங்களில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து தேர்தல் திணைக்களம்  பொறுப்பேற்கவுள்ளதெனவும் அன்றிலிருந்து அந்த வாக்களிப்பு நிலையத்தில் கிருமித் தொற்று நீக்கம் செய்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் தினத்தன்று மக்கள் வாக்களிக்கக் கூடிய வாறான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளமை தொடர்பில் ஆராயப்பட்டது.

அதேபோன்று பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் மற்றும் யாழ்மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.