கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுப்பு
வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கமல் ரத்வத்தே மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்குக் கொண்டு வர முடியாத நிலைமை காணப்படுகிறது.
இதன் காரணமாக இறுதிச்சட ங்குகளை அந்த அந்த நாடுகளிலே செய்யுமாறு அறிவிப்பு விடுத்துள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை