தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சி பிரதிநிகளுக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது கொரோனா அச்சுறுத்தல் மத்தியில் பொதுத்தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதில் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.
அத்துடன் சுகாதார நடைமுறைகளிலும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொதுத்தேர்தல் தொடர்பாக இதுவரை 3,377 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை