வாழைச்சேனையில் கொள்ளையர்கள் மீது தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் கொள்ளையிடச் சென்று வீட்டின் உரிமையாளரை தாக்கி கொள்ளையிட முற்பட்டபோது கொள்ளையர் மீது வீட்டு உரிமையாளர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பாடசாலைவீதி மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பரசுராமன் நவரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ”வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்கம்கேணி பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் வீடுஒன்றில் இருவர் கொள்ளையடிக்க சென்றுள்ளனர் இந்த நிலையில் கொள்ளையர்கள் வீட்டிலுள்ளவர்களை தாக்கி அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடிக்க முற்பட்டனர் இதன்போது தாக்குதலுக்குள்ளான வீட்டின் உரிமையாளர் தனது உயிரை காப்பாற்ற கொள்ளையர் மீது தாக்கியபோது கொள்ளையன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற கொள்ளையர் தப்பி ஓடியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த கொள்ளையன் 63 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் எனவும் சம்பவதினமான நேற்று பிறிதொருவீடு ஒன்றில் கொள்ளையடித்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டபோதே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
உயிரிழந்த குறித்த கொள்ளையனின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழசை;சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை