தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ரணில் யாழிற்கு விஜயம்!
தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவர், யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், கல்வியாளர்களுடனான சந்திப்பையும் ரணில் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.












கருத்துக்களேதுமில்லை