கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் இருந்து பொது சுகாதாரப் பரிசோதகர்கள் விலகல்!

கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில்  இருந்தும் விலகுவதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி ஒன்று இன்னும் சில தினங்களில் வெளியப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வர்தமானில் தங்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்திம்  செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்று காலத்தில் மக்களோடு மக்களா செயற்பட்ட தங்களது ஊழியர்களை களங்கப்படுத்தும் செயற்பாட்டினை சுகாதார அமைச்சு செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.