ஜனாதிபதி அம்பாறை விஜயம் – மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்தார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பிரசாரக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதன்போது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

கிராமங்களில் தொழிநுட்ப பயிற்சிகள் இல்லாத காரணத்தால் இளைஞர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு இங்கு தெரிவிக்கப்பட்டது.

அதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை வகுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கூடியிருந்த மாணவர்கள் விடுத்த வேண்டுகோளை கல்வி அமைச்சரிடம் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், பல பிரதேசங்களில் முன்பள்ளி ஆசிரியர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பிரதேசத்தில் தொழிலற்ற பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியிடம் அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.