தமிழர்களின் ஜனநாயக பலம் பொதுத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – சுமந்திரன்
தமிழர்களின் ஜனநாயக பலம் பொதுத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே, சர்வதேசத்தின் உதவியை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ” இந்த தேர்தலில் நாம் ஒருமுகமாக சென்று வாக்களிக்க வேண்டும்,அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும். இதை செய்கின்ற போதுதான் தொடர்சியாக தமிழ் தேசம் இந்த நாட்டில் இருக்கிறது என ஆட்சியாளர்களுக்கும் உலகத்துக்கும் திரும்பவும் ஒரு பலமான செய்தியாக இருக்கும்.
உலகத்தின் ஆதரவு எங்களுக்கு இருக்கின்றது ஆனால் அந்த ஆதரவை எங்களுக்கு அவர்கள் கொடுப்பதற்கு எங்களுடைய ஜனநாயகப்பலத்தை காட்ட வேண்டும் இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்”,என வேண்டுகோள்விடுத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை