தமிழர்கள் சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது – சிறீதரன்

தமிழர்கள் இனவிடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில் ,”நாங்கள் இந்த நாட்டிலே மிக முக்கியமான தருணத்திலே நிற்கின்றோம்  மிக நெருக்கடியான  தருணத்திலே நிற்கின்றோம்   காரணம் தேர்தல் வருகின்ற போது தான் அந்த தேர்தல் காலத்திலே எங்கள் கட்சியின் உடைய கடந்த கால செயற்பாடுகள் இந்த அடுத்த 5 ஆண்டுகளிலே என்ன விடயங்களை கையாளப் போகின்றது என்ற முக்கிய விடயங்களை தேர்தல் களத்திலே நாங்கள் சொல்லுகின்றோம்.

தமிழ்த் தேசியம் என யாரும் சிந்திக்கக் கூடாது தமிழ்தேசியத்தின் கீழ் நீங்கள் யாரும் ஒன்றாக இணையக் கூடாது தமிழ்ர்கள்  சேர்ந்து இனவிடுதலைக்காக பயணிக்கக் கூடாது என்பதில் சிங்கள அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது

ஒரு பலமான சக்தியாக நாங்கள்  நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டிய தேவை இருக்கிறது அந்தப் பலத்தை வாக்கின் ஊடாகத்தான் பெறமுடியும் இதனை கடந்த ஆண்டுகளில் நீங்கள் செய்திருக்கின்றீர்கள் இம்முறை இருக்கிற சிதைவுகளும் பல நெருக்கடிகளும்  எங்கள் மக்களை கொஞ்சம் ஆட்டிப் பார்கிறது இது எங்களை சிதறடிப்பதற்கான முயற்சி என்பதனை கருத்தில் கொண்டு கடந்த முறை வழங்கிய ஆணையை மேவிய ஆனைய இம் முறை நீங்கள் தர வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என   தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.