சலுகைகளை வழங்கி சமாளிக்கவே முடியாது – தமிழர் உரிமைகளே வேண்டும் என்கிறார் சம்பந்தன்
“சலுகைகளை வழங்கி சம்பந்தனைச் சமாளிக்கலாம் என்று மஹிந்த ராஜபக்சவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ நினைக்கக்கூடாது. சலுகைகளை வழங்கி சம்பந்தனை ஒருபோதும் சமாளிக்கவே முடியாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காக எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்கமாட்டோம்; உரிமைகளை விட்டுக்கொடுக்கமாட்டோம். இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியது எமது கடமை. நாங்கள் இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
சலுகைகளை வழங்கி சம்பந்தனைச் சமாளிக்கலாம் என்று மஹிந்த ராஜபக்சவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ நினைக்கக்கூடாது. சலுகைகளை வழங்கி சம்பந்தனை ஒருபோதும் சமாளிக்கவே முடியாது. சம்பந்தனைச் சமாளிப்பதாக இருந்தால் சம்பந்தனுடைய மக்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளை வழங்க வேண்டும். அவற்றைக் கொடுத்தால்தான் சம்பந்தனை அவர்களால் சமாதானப்படுத்த முடியும்; சமாளிக்க முடியும். இதுதான் உண்மையான நிலைமை. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை