பொதுத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பின் இறுதி நாள் இன்று!

எதிர்வரும் பொது தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடையவுள்ளது.

இதற்கமைய கடந்த 6 நாட்களில் தபால்மூல வாக்கினை செலுத்த முடியாதவர்களுக்கு இன்று இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இம்முறை தபால்மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஒதுக்கியது.

அதன் பிரகாரம் 13,14,15,16 மற்றும் 17ஆம் திகதிகளில் சுகாதாரப் பிரிவு, தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள், பொலிஸ துறையினர், பாதுகாப்பு படையினர், அரச துறையினர் உள்ளிட்டோர் வாக்களித்திருந்தனர்.

குறித்த தினங்களில் தமது வாக்கினை அளிக்காத வாக்களார்கள் நேற்றும் இன்றும் தமது வாக்குகளை அளிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு இணங்கவே, இன்றும் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, கொரோனா அச்சம் காரணமாக ராஜாங்கனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதுவரையில் 90 வீதமானவர்கள் தபால்மூல வாக்கினை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் இம்முறை 705,085 வாக்காளர்கள் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.