கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 4ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளதாக ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இன்று முதல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறவுள்ள ஆடிவேல் உற்சவத்தை பார்வையிட பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் ஆடிவேல் விழாவில் பெரஹர நடைபெறும் முழுமையான கால எல்லை மக்களுக்கு பார்வையிடுவதற்கோ கலந்துகொள்வதற்கோ சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும் மொனராகலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை