நொண்டிச்சாட்டு சொல்லி ஓடுகின்ற கஜேந்திரகுமாரை துரத்திப் பிடிக்கும் அவசியம் எனக்கில்லை – சுமந்திரன் யாருடனும் விவாதத்துக்கு நான் எப்போதும் தயார்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் என்.ஸ்ரீகாந்தா மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கயேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பகிரங்க விவாதத்தை நடத்த தான் தயாராக இருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஸ்ரீகாந்தா சவால்விட்டுள்ள நிலையில் பொதுவெளியில் நடுநிலையான நபரை ஒருவர் முன்னிலையில் விவாதம் நடத்த தான் தயாராக இருப்பதாக கூறினார்.

இதேவேளை தன்னுடன் விவாதம் நடத்த சுமந்திரனுக்கு தகுதியில்லை என கயேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக பதிலளித்த அவர், அவருடன் 4 தடவைகள் விவாதத்தை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

விவாதத்தில் இருந்து தப்பிப்பதற்காக நொண்டிச்சாட்டுக்களை கூறிக்கொண்டு கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஓடுகின்றார் என்றும் அவரை துரத்திப்பிடிக்கும் அவசியம் தனக்கு இல்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்