கப்பலொன்றில் பணியாற்றுவதற்காக 28 கடற்படை ஊழியர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலொன்றில் பணியாற்றுவதற்காக 28 கடற்படை ஊழியர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டாரிலிருந்து இன்று(புதன்கிழமை) அதிகாலை 1.30 அளவில் இவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன், அவர்கள் அனைவரும் கொழும்பிலுள்ள இரண்டு தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவர்கள் கொழும்பிலுள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை