மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து இணக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தீர்மானித்துள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைட் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சில காரணங்களுக்காக இலங்கையர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு முன்னர், அவர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.