’72 வருட தமிழினப் படுகொலை’ – பிரான்ஸில் கையெழுத்து போராட்டம்

’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் நடத்தப்பட்டு வரும் கண்காட்சியை பெருந்தொகையான மக்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 20ஆம் திகதி ஜுலை முதல் எதிர்வரும் சனிக்கிழமை 25ஆம் திகதி வரை ’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் கண்காட்சியொன்று நடத்தப்பட்டு வருகிறது.

‘தமிழர் இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் பெருந்தொகையான இளையோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையில் யுத்ததத்தின்போது இடம்பெற்ற படங்களைக் கண்ட பிரஞ்சு மக்கள் உடனடியாகவே தமிழின அழிப்பிற்கு எதிராக நீதி கேட்கும் கோரிக்கையில் கையொப்பம் இட்டு தங்களது ஆதரவுகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.