சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலை நடத்த இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி
இலங்கையில் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலை நடத்துவதன் மூலம், ஜனநாயக மயமாக்கலை தக்கவைக்கும் திட்டத்திற்காக ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் 47,019 அமெரிக்க டொலர்களை ஜப்பான் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஒரு முன்னணி உள்ளூராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல், நடுநிலை அடிப்படையில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதனால் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடக்கவுள்ள பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்படும்.
இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடி மற்றும் வாக்கெண்ணும் நிலையத்திலும் 460 தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி திட்டங்கள் உள்ளன.
இலங்கையின் நீண்டகால நட்பு நாடான ஜப்பான், இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக பெப்ரலுக்கு தனது ஆதரவை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை