இரணைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 126 பேர் விடுவிப்பு!
கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த 126 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
தனிமைப்படுத்தலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த 126 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 316 பேர் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுசெய்து வீடுகளுக்குத் திரும்யுள்ளனர்.
அத்துடன், நாட்டிலுள்ள 47 தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது, நான்காயிரத்து 984 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை