தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்தனர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமச்சாரிய சுவாமியை சந்தித்துக் கலந்துரையாடினர்.
கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் யாழ். நல்லூரில் அமைந்துள் நல்லை ஆதீனத்தில் குரு முதல்வரை இன்று (வியாழக்கிழமை) சந்தித்தனர்.
இச்சந்திப்பில், வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன், ஈ.சரவணபவன், சசிகலா ரவிராஜ், இமானுவேல் ஆர்னோல்ட், தபேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் தேர்தல் கள நிலைமைகள் குறித்தும் குரு முதல்வருடன் கலந்துரையாடியதுடன் தேர்தல் விஞ்ஞாபன பிரதி ஒன்றினையும் அவருக்கு கூட்டமைப்பினர் வழங்கினர்.
கருத்துக்களேதுமில்லை