ஐக்கிய தேசியக்கட்சியின் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு மஹிந்த அழைப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் இளைஞர் மற்றும் யுவதிகள், நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மொட்டு கட்சியுடன் இணைந்துக்கொள்வதே சிறந்ததென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொட்டாவ நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, ஐ.தே.க, சிறிகொத்தவை கைப்பற்றும் எண்ணத்திலேயே தேர்தலில் களமிறங்கியுள்ளது.

எனவே ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் யுவதிகள் அவர்களின் பாசறைக்குள் இருப்பதை  விட நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள மொட்டு  பாசறைக்குள் நுழைந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுத்தது. நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி  முன்னோக்கி கொண்டுச் செல்வது குறித்து சிந்திக்கவில்லை.

இந்நிலையில் ஐ.தே.க.வும் ஐக்கிய மக்கள் சக்தியும் எஞ்சியுள்ள அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு  தற்போது  மக்களிடம் அதிகாரத்தை பெற்றுத்தருமாறு கோருகின்றன.

கடந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினால் முழு நாடும் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

எனவே  அதிலிருந்து மீண்டு  நாடு முன்னேற வேண்டுமாயின்  மொட்டு  கட்சிதான் ஆட்சிக்கு வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.