நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலை மறக்கவில்லை- மஹிந்த
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கலை தான் மறந்துவிட வில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹாலிஎல பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
குறித்த கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 5 வருடங்களாக இந்த நாட்டில், வேலை எதையும் செய்யாத ஓர் அரசாங்கமே ஆட்சியில் இருந்தது.
இவ்வாறானதொரு யுகத்தில், அரசியல் பழி வாங்கல் மட்டும்தான் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
எமது பிள்ளைகளை கைது செய்தார்கள். எமது ஆதரவாளர்கள், உறுப்பினர்களை சிறைக்குள் தள்ளினார்கள்.
மாதக்கணக்கில் விசாரணை செய்தார்கள். என்னை ஆணைக்குழுக்களுக்கு அழைப்பித்து விசாரணை செய்தார்கள். இதுதான் நடந்தது.
இதனை நாம் மறக்கவில்லை. மறக்கக்கூடிய அரசியல் யுகம் அல்ல அது. அரசியல்ரீதியாக நாம் அப்போது அடைந்த வேதனையை நாம் மறக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை