பொதுஜன ஆட்சிக்கு வந்ததும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு! பொதுஜனபெரமுன வேட்பாளர் ஜனக நந்தகுமார்

 – வவுனியா நிருபர்  –
தமிழ் மக்களது பிரச்சனைகள் தீர்க்கப்படக் கூடாது என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததும் மக்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படும் என அக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார்.
 பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் வன்னி மக்களின்
கஸ்ரங்களும், துன்பங்களும் ஏற்பட்ட போது அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. கிராமங்களுக்கு சென்று கேட்கின்ற போது அந்த மக்களிடம் குறைந்தபட்சம் தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி இலக்கங்கள் கூட இல்லை. அரசியலில் இருந்தால் மனச்சாட்சி பூர்வமாக அரசியலில் இயங்க வேண்டும். மக்களுக்கு ஒரு தேவையை செய்து கொடுக்கும் போது அதனை வெற்றிகரமாக செய்து கொடுக்க வேண்டும். அப்படியில்லா விட்டால் அது பிரயோசனம் இல்லை. மக்கள் அப்பாவித் தனமாக உள்ளார்கள். இதனால் சில அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்கின்றார்கள். தேர்தல் மூலம் ஆளும் கட்சியுடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வருகிறார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் வன்னி மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்ததை விட இம்முறை அதிகளவில் வாக்களிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றது
: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 27 ஆயிரம் வாக்குகள் எங்களுக்கு கிடைத்தது. அந்தக் காலத்தில் தமிழ் கட்சிகள் சிலவும் எங்களுடன் ஒன்றிணைந்து இருந்தார்கள். அவர்களின் ஊடாகவும் வேலைகளை செய்தோம். இம்முறை தமிழ் மக்களின் அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்புகின்றோம். கடந்த 15, 20 வருடமாக தமிழ் மக்கள் தமது பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற எதிர்பார்பில் தமிழ் தலைவர்களுக்கு வாக்களித்து வந்தார்கள். ஆனால் அவர்களது பிரச்சனைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. தமிழ் தலைவர்கள் பாராளுமன்றத்தில் தமக்காக குரல் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தார்கள் ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனால் இனியும் அவர்கள் தமது பிரச்சனையை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை. இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம மட்ட தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து என்னுடன் கைகோர்த்துள்ளார்கள். வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு சென்ற போது எமக்கு அங்கு அதிக வரவேற்பு கிடைக்கின்றது. இதனால் இதுவரை காலமும் வன்னியில் பொதுஜன பெரமுன கட்சிக்கு கிடைத்த வாக்குகுளை விட அதிகளவிலான வாக்குகளை இம்முறை என்னால் பெற முடியும். தமிழ் மக்கள் அறிவு பூர்வமாக சிந்தித்துள்ளார்கள். இதனால் அவர்களது வாக்கு பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கும்.வெற்றி பெற்ற பின்னர் வன்னியில் இருக்கக் கூடிய அனைத்து மக்களினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவோம். அது மிக முக்கியமானது. சில கிராமங்களுக்கு செல்லும் போது அவர்கள் எம்மை வித்தியாசமாக பார்க்கிறார்கள். சிங்கள மக்களை சில கிராமங்களில் வித்தியாசமாக பார்க்கிறார்கள். இந்த நிலை ஒரு வருட காலத்தில் நிச்சயமாக மாறும். ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோருடன் எனக்கு உள்ள நெருக்கமான தொடர்பை பயன்படுத்தி வன்னி மக்களது பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தி 2020-2025 வரையான ஐந்து வருட காலத்தில் இன, மத, மொழி பேதமின்றி என்னால் தீர்த்து வைக்க முடியும். வன்னி மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை என்னால் ஏற்படுத்த முடியும். இதன் மூலம் மக்களின் பேராதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு செல்லும் இரண்டு, மூன்று ஆசனங்களை கூட நாம் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும். எனவே, பொதுஜன பெரமுனவின் கரங்களைப் பலப்படுத்த வன்னி மக்கள் முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.