தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் வாக்களிப்பு குறித்த இறுதி முடிவை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவிருந்த நடமாடும் வாக்குச்சாவடி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதற்காக அனைத்து கட்சி செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு விசேட தினமாக ஜூலை 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஆராயப்பட்ட நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.