கருணா 3000 பேரை கொன்றதாக தெரிவித்த கருத்து உட்பட முக்கிய பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது
மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பணவீக்கம் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் உட்பட பல சிக்கல்களை மக்கள் எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டினார்.
2,000 முதல் 3,000 இராணுவத்தினரை கொலை செய்தமை தொடர்பாக கருணா அம்மான் தெரிவித்த கருத்து, முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமனின் இறுதிச் சடங்கில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டமை மற்றும் 2011 உலகக் கிண்ண போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு உள்ளிட்ட பல விடயங்களை முக்கியமல்ல என கூறி புறக்கணிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு நாட்டுக்கு எதிரான சர்வதேச சதியை முறியடிப்பதற்காக மக்களை அணிதிரளுமாறும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பொதுமக்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.
கருத்துக்களேதுமில்லை