கந்தளாயில் ஒரு பிள்ளையின் தந்தை தற்கொலை
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 76/1, பேராறு- கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஏ.றுமைஸ் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மனைவி அவரை விட்டு பிரிந்த நிலையில் மன வேதைனைக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை