இராஜாங்கனையில் நாளை தபால்மூல வாக்களிப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

இதற்கமைய நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையான காலப்பகுதியில் குறித்த தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

ராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் வலயக்கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் தபால் மூல வாக்களிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்கான வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நடவடிக்கை எதிர்வரும் மாதம் இரண்டாம் திகதி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.