கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – நேற்று மாத்திரம் 23 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த 23 பேரில் 17 பேர் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் என்றும் 5 பேர் கட்டாரிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் என்றும் ஏனைய நபர் சவுதி அரேபியாவில் இருந்து வந்தவர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 121 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தற்போதைய நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான  673 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 80 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், இந்த கொடிய வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.