குருநாகலில் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் – விசாரணை அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைப்பு

குருநாகலில் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பான வட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வட மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கையே பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் இதுவரை எவரையும் பொலிஸார் சந்தேக நபராக அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக குருநாகல் மேயரை கைது செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாமல் கருணாரத்ன ரீட் மனு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.