யாழில் ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ வீரர்களை சந்தித்தார் இராணுவ தளபதி

யாழ்ப்பாணத்திலுள்ள ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களது பிரச்சினைகள் பற்றி இராணுவத் தளபதியுமான லெப்டிணன் ஜெனரல்  சவேந்திர சில்வா கேட்டறிந்துள்ளார்.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த முன்னாள் சிப்பாய்களின் குறை நிறைகள் சுகாதார நிலைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது பிரதான பிரச்சினையாக காணப்பட்ட மாதாந்த மருந்துக்களை பெற்றுக் கொள்ளலின் தீர்வாக மாதத்திற்குரிய மருந்துக்களை அவர்களது வீடுகளுக்கே கிடைக்கச் செய்வதென்பதும் அவர்களின் அவசர வைத்திய தேவைகளின் போது சிகிச்சைக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் இதர வசதிகளை செய்து கொடுக்குமாறு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

மேலும் ஓய்வு பெற்ற படைச்சிப்பாய்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கொவிட் 19 கட்டுப்படுத்தலில் இராணுவத் தளபதியின் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.

இராணுவத் தளபதி லெப்டிணன் ஜெனரல் சவேந்திர சில்வா  யாழ் மக்களின் அத்தியவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக வடக்கிலிருக்கும் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் சமூக நலத் திட்டங்கள் மற்றும் இடர் காலங்களின் இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்