பொதுஜன பெரமுனவினால் மட்டுமே இலங்கையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் – அமுனுகம

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மட்டுமே நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டிற்கு ஸ்திரத்தன்மை மற்றும் திறமையான ஆளுகை தேவை என்றும், எனவே நாடாளுமன்றத்திற்கு திறமையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

நாடு ஒரு தீர்க்கமான தேர்தலை எதிர்கொள்கிறது என்றும் வாக்காளர்கள் ஒரு நிலையான நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு நிலையான மற்றும் திறமையான அரசாங்கத்தை நியமிப்பதன் மூலம் நாடு எதிர்கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்