ஓமந்தை நாவற்குளம் பகுதியில் மேய்சலுக்கு செல்லும் மாடுகளை வேட்டையாடும் புலி

வவுனியா நிருபர்

வவுனியா, ஓமந்தை நாவற்குளம் பகுதியில் மேய்சலுக்கு செல்லும் மாடுகளை புலி வேட்டையாடி வருவதாக அப் பகுதி தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் குடிமனைகளை அண்டியதாக உள்ள சிறிய காட்டுப் பகுதியிக்குள் ஆறு சிறுத்தைப் புலிகள் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த காட்டுப் பகுதியை அண்மித்தாக மாடுகள் மேய்சலில் ஈடுபடும் போது புலிகள் குறித்த மாடுகளை வேட்டையாடி உணவாக உட் கொள்கின்றன. ஒரு வருட காலத்தில் 37 மாடுகள் புலிகளினால் இரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் சில நாட்களில் ஒரே நாளில் 5 மாடுகள் கூட மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் புலிகளின் நடமாட்டத்தை அவதானிக்க முடிவதாகவும், அவற்றின் அச்சுறுத்தலால் தமது கால்நடைகரைள வளர்க்க முடியதாதுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி கால்நடை வளர்ப்போர் கவலை வெளியிட்டுள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்