அரசியல்வாதிகள் மக்களுக்கு பயப்பட வேண்டும்: நீல் சாந்த

வவுனியா நிருபர்

அரசியல்வாதிகள் மக்களுக்கு பயப்பட வேண்டும் என வன்னியில் ஐக்கிய வன்னி மக்கள் கட்சி சார்பாக சுயேட்சைக் குழு-03 இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் நீல் சாந்த தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி மக்களுக்கு உதவி செய்வதற்காகவே நான் வந்தேன். ஆனால் மக்கள் கேட்டதால் அரசியல் செய்கின்றேன். மக்களுக்கு நாங்கள் பல்வேறு உதவிகளை சொந்தப் பணத்தில் செய்துள்ளோம். மக்களுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொடுக்க கூடிய அபிவிருத்திகளே அவசியமாகவுள்ளது.

வன்னியில் இருந்த அரசியல்வாதிகள் சரியாக அரசியல் செய்திருந்தால் நாங்கள் இங்கு வந்து அரசியல் செய்ய வேண்டியதில்லை. பாராளுமன்றம் சென்றால் எனது வாகன சலுகைப் பத்திரத்தின் பணத்தை மக்களுக்கே முழுமையாக வழங்குவேன். தமிழ், சிங்கள மக்கள் எம்முடன் இணைந்துள்ளார்கள். தேர்தலின் போது வீடு வீடாக செல்லும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்த பின் மக்களிடம் செல்வதில்லை. சாதாரண மக்கள் அரசியல்வாதிக்கு பயம். ஆனால் அது இல்லை அரசியல். அரசியல்வாதிகள் தான் மக்களுக்கு பயப்பட வேண்டும். எனவே மக்கள் இதனை புரிந்து வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்