ஐக்கிய தேசியக்கட்சியின் அடுத்த தலைவர் யார் ?..

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் கொண்டுவர பேச்சு நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி புதிய தலைவராக தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினரான, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தனவை நியமிக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இருந்த போதிலும் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

பெரும்பாலும் அடுத்தவாரம் கூடுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் இறுதிமுடிவை கட்சித் தலைவர் எடுப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.