வடகிழக்கில் ஒரு மாவட்டத்தையும் 52கிராமத்தையும் கொண்ட மக்களுக்குமான அம்பாறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனம் அவசியம்: த.அ.க வாலிப முன்னணி துணைச்செயலாளர் சட்டமானி நிதான்சன் வேண்டுகோள்

வடகிழக்கில் ஒரு மாவட்டத்தையும் 52கிராமத்தையும் கொண்ட மக்களுக்குமான அம்பாறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனம் அவசியம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர்.சட்டமானி அ.நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் ஆசனம் இல்லாமைக்கு தேசிய கட்சியின் கைக்கூலிகள் காரணமாக இருக்கலாம் ஆனாலும் அம்பாறை உட்பட கிழக்கில் பின்னடவை சந்திக்க காரணம் வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு நடக்காமையே பிரதான காரணமாகும்.

பிரதேச செயலகம் பெற்றுத் தராதவர்கள் சமஷ்டி தீர்வு பெற்று தருவார்களா எனும் பிரச்சினை நிலவுகின்றது.கட்சியின் இருப்பையும் மக்களின் காணிகள், இருப்பு காப்பாற்றபட வேண்டுமாயின் அம்பாறைக்கு தேசிய பட்டியல் அவசியமாகிறது அதனை தலைமை சிந்தித்து நல்ல முடிவெடுக்கும் என நம்பிக்கை உள்ளது.

ஆனாலும் கட்சியால் அம்பாறை மாவட்டம் புறக்கணிக்கபடுமாயின் நிச்சயமாக வடகிழக்கு தாய பூமியில் அம்பாறை விலக்களிக்கப்பட்ட மாவட்டமாக மாறும் பிரதேச செயலகம் தரமுயர்வு நடைபெறவில்லை என கொந்தளித்து காட்டிய அதிருப்தி வெளிப்பாடானது தேசிய பட்டியலும் வழங்கபடவில்லையாயின் உச்சத்தை தொடும் கட்சி தமிழ் மக்களின் இருப்பையும் அம்பாறையையின் இருப்பையும் காப்பாற்ற இல்லையாயின் தமிழரை யாரும் காக்க முடியாது என சிந்தித்து கட்சியால் எந்தவொரு தமிழ் பிரதிநிதியும் இல்லாத 116000மேற்றபட்ட மக்களையும் புறக்கணித்தது என யாரும் சொல்லாத அளவுக்கு கட்சி தன்மானத்தை இழக்காது அம்பாறைக்கு தேசிய பட்டியலை வழங்க வேண்டும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்