தோல்வியுற்றவர்களுக்கு தேசியப் பட்டியல் இல்லை

“நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் எவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டடியலில் இடமளிக்கபோவதில்லை.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், மேலும் தெரிவித்ததாவது:-

“சுற்றிவளைத்து கல்லெறியும்போதும், வலுவான ஓர் ஆரம்பத்தை ஐக்கிய மக்கள் சக்தியால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. நாட்டு மக்களுக்கு தேர்தல் களத்தில் இருக்கின்ற ஒரேயொரு மாற்றுச் சக்தியாக எமது கட்சி மட்டுமே உள்ளது.

நாட்டின் அரசியல் களத்துக்கு முதல் அடி எடுத்து வைக்கும்போதே வலுவான அணியாக ஐக்கிய மக்கள் சக்தியால் உருவெடுக்க முடிந்துள்ளது.

மொட்டுக் கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் உருவெடுப்பதற்காக இரு வருடங்கள் சென்றன.

அத்தோடு மொட்டுக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகொள்ள 4 வருட காலத்தை எடுத்துக்கொண்டது.

குறுகிய காலத்தில் தேர்தல் களத்துக்குள் பெருமளவு ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியே உள்ளது” – என்றார்.
…………….

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்