புகையிரதம் யானையுடன் மோதி தடம் புரண்டது; வடக்கு புகையிரத சேவை பாதிப்பு

வவுனியா நிருபர்

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் யானையுடன் மோதி தடம் புரண்டது; வடக்கு புகையிரத சேவை பாதிப்பு

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டதால் வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்படைந்துள்ளது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றது.

காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஸ்ரீ தேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம் மாங்குளத்திற்கும் புளியங்குளத்திற்குப் இடையே பயணித்த போது புகையிரத தண்டவாளத்தை ஊடறுத்துச் சென்ற காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டது.

இவ் விபத்து காரணமாக யானை சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளது.

அத்துடன், வடக்குக்கான புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளன. இவ் விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்