இரு முன்னாள் அமைச்சர்கள் ஐ.தே.கவினுள் கடும் மோதல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு, கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியலுக்கு முன்னாள் அமைச்சர்கள் இருவர் மோதிக்கொள்கின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இந்த இரண்டு பிரபலங்களும் தங்களுக்கு உறுப்பினர் பதவியை வழங்குமாறு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.

தோல்வியடைந்த வேட்பாளர்கள் எவரும் நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்குத் தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் தோல்வியடைந்தவர்கள் ஒருபோதும் நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று  ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தேசியப் பட்டியல் தனக்கானது என ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கமைய தேசியப் பட்டியலில் ரணில் நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்